- கன்னிமூல கணபதியே... சரணம் ஐயப்பா
- காந்தமலை ஜோதியே... சரணம் ஐயப்பா
- ஹரிஹரசுதனே... சரணம் ஐயப்பா
- அன்னதானப் பிரபுவே... சரணம் ஐயப்பா
- ஆறுமுகன் சோதரனே... சரணம் ஐயப்பா
- ஆபத்தில் காப்பவனே... சரணம் ஐயப்பா
- இன்தமிழ்ச் சுவையே... சரணம் ஐயப்பா
- இச்சை தவிர்ப்பவனே... சரணம் ஐயப்பா
- ஈசனின் திருமகனே... சரணம் ஐயப்பா
- ஈடில்லா தெய்வமே... சரணம் ஐயப்பா
- உண்மைப் பரம்பொருளே... சரணம் ஐயப்பா
- உலகாளும் காவலனே... சரணம் ஐயப்பா
- ஊமைக்கருள் புரிந்தவனே... சரணம் ஐயப்பா
- ஊழ்வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
- எளியோர்க்கு அருள்பவனே... சரணம் ஐயப்பா
- எங்கள் குல தெய்வமே... சரணம் ஐயப்பா
- ஏழைப் பங்காளனே... சரணம் ஐயப்பா
- ஏகாந்த மூர்த்தியே... சரணம் ஐயப்பா
- ஐங்கரன் தம்பியே... சரணம் ஐயப்பா
- ஐயமெல்லாம் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
- ஒப்பில்லாத் திருமேனியே... சரணம் ஐயப்பா
- ஒளிரும் திருவிளக்கே... சரணம் ஐயப்பா
- ஓம்காரப் பரம்பொருளே.. சரணம் ஐயப்பா
- ஓதும் மறைபொருளே.. சரணம் ஐயப்பா
- அவுடதங்கள் அருள்பவனே.. சரணம் ஐயப்பா
- சவுபாக்கியம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
- கலியுக வரதனே... சரணம் ஐயப்பா
- சபரிமலை சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
- சிவன்மால் திருமகனே... சரணம் ஐயப்பா
- சிந்தனையில் நிறைந்தவனே... சரணம் ஐயப்பா
- அச்சன்கோயில் அரசே... சரணம் ஐயப்பா
- ஆரியங்காவு ஐயாவே... சரணம் ஐயப்பா
- குளத்துப்புழை பாலகனே... சரணம் ஐயப்பா
- பொன்னம்பல வாசனே... சரணம் ஐயப்பா
- வாபரின் தோழனே... சரணம் ஐயப்பா
- வில்லாளி வீரனே... சரணம் ஐயப்பா
- வீர மணிகண்டனே... சரணம் ஐயப்பா
- உத்திரத்தில் உதித்தவனே... சரணம் ஐயப்பா
- உத்தமனே சத்தியனே... சரணம் ஐயப்பா
- பம்பையில் பிறந்தவனே... சரணம் ஐயப்பா
- பந்தளத்தில் வளர்ந்தவனே... சரணம் ஐயப்பா
- சகலகலை வல்லோனே... சரணம் ஐயப்பா
- சாந்தம் நிறை மெய்ப்பொருளே... சரணம் ஐயப்பா
- குருமகன் குறைதீர்த்தவனே... சரணம் ஐயப்பா
- குருதட்சணை அளித்தவனே... சரணம் ஐயப்பா
- புலிவாகன புண்ணியனே... சரணம் ஐயப்பா
- புலிப்பாலைக் கொணர்ந்தவனே... சரணம் ஐயப்பா
- தாயின் நோய் தீர்த்தவனே... சரணம் ஐயப்பா
- குருவின் குருவே... சரணம் ஐயப்பா
- துளசிமணி மார்பனே... சரணம் ஐயப்பா
- தூயவுள்ளம் அளிப்பவனே... சரணம் ஐயப்பா
- இருமுடிப் பிரியனே... சரணம் ஐயப்பா
- எரிமேலி சாஸ்தாவே... சரணம் ஐயப்பா
- நித்ய பிரம்மச்சாரியே... சரணம் ஐயப்பா
- நீலவஸ்திர தாரியே... சரணம் ஐயப்பா
- பேட்டை துள்ளும் பேரருளே... சரணம் ஐயப்பா
- பெரும் வினை அழிப்பவனே... சரணம் ஐயப்பா
- சாஸ்தாவே பரம்பொருளே... சரணம் ஐயப்பா
- சாந்தி தரும் பேரருளே... சரணம் ஐயப்பா
- பேரூர்த்தோடு தரிசனமே... சரணம் ஐயப்பா
- பேதமையை ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
- காளைகட்டி சிவன் மகனே... சரணம் ஐயப்பா
- அதிர்வேட்டுப்பிரியனே... சரணம் ஐயப்பா
- அழுதைமலை ஏற்றமே.... சரணம் ஐயப்பா
- ஆனந்தமிகு பஜனை பிரியனே... சரணம் ஐயப்பா
- கல்லிடும் குன்றமே.... சரணம்ஐயப்பா
- உடும்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
- இஞ்சிப்பாறைக் கோட்டையே... சரணம் ஐயப்பா
- கரியிலந்தோடே... சரணம் ஐயப்பா
- கரிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
- கரிமலை இறக்கமே... சரணம் ஐயப்பா
- பெரியானை வட்டமே... சரணம் ஐயப்பா
- சிறியானை வட்டமே... சரணம் ஐயப்பா
- பம்பா நதித் தீர்த்தமே... சரணம் ஐயப்பா
- பாவமெல்லாம் அழிப்பவனே... சரணம் ஐயப்பா
- திரிவேணி சங்கமமே... சரணம் ஐயப்பா
- திருராமர் பாதமே... சரணம் ஐயப்பா
- சக்தி பூஜை கொண்டவனே... சரணம் ஐயப்பா
- சபரிக்கு அருள் செய்தவனே... சரணம் ஐயப்பா
- தீபஜோதித் திருஒளியே... சரணம் ஐயப்பா
- தீராத நோய் தீர்ப்பவனே... சரணம் ஐயப்பா
- பம்பா விளக்கே... சரணம் ஐயப்பா
- பலவினைகள் ஒழிப்பவனே... சரணம் ஐயப்பா
- தென்புலத்தார் வழிபாடே... சரணம் ஐயப்பா
- திருப் பம்பையின் புண்ணியமே... சரணம் ஐயப்பா
- நீலிமலை ஏற்றமே... சரணம் ஐயப்பா
- நிறைவுள்ளம் தருபவனே... சரணம் ஐயப்பா
- அப்பாச்சி மேடே... சரணம் ஐயப்பா
- இப்பாச்சி குழியே... சரணம் ஐயப்பா
- சபரி பீடமே...... சரணம் ஐயப்பா
- சரங்குத்தியானே..... சரணம் ஐயப்பா
- உரல்குழி தீர்த்தமே... சரணம் ஐயப்பா
- கருப்பண்ணசாமியே... சரணம் ஐயப்பா
- கடுத்த சாமியே.... சரணம் ஐயப்பா
- பதினெட்டாம்படியே.... சரணம் ஐயப்பா
- பகவானின் சந்நிதியே..... சரணம் ஐயப்பா
- பரவசப் பேருணர்வே.... சரணம் ஐயப்பா
- பசுவின் நெய்யே..... சரணம் ஐயப்பா
- கற்பூரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
- நாகராஜப் பிரபுவே.... சரணம் ஐயப்பா
- மாளிகைப் புறத்தம்மனே.... சரணம் ஐயப்பா
- மஞ்சமாதா திருவருளே.... சரணம் ஐயப்பா
- அக்கினி குண்டமே.... சரணம் ஐயப்பா
- அலங்காரப் பிரியனே.... சரணம் ஐயப்பா
- பஸ்மக் குளமே ... சரணம் ஐயப்பா
- சற்குரு நாதனே ... சரணம்ஐயப்பா
- மகர ஜோதியே.... சரணம் ஐயப்பா
- மங்கள மூர்த்தியே... சரணம் ஐயப்பா
Friday, 23 February 2018
ஐயப்பன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment