- ஓம் சூரியனே போற்றி
- ஓம் சூழ் ஒளியே போற்றி
- ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
- ஓம் பார்வை கொடுப்போனே போற்றி
- ஓம் கோள்களின் தலைவனே போற்றி
- ஓம் கோதுமை விரும்பியே போற்றி
- ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
- ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
- ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
- ஓம் செந்நிற மேனியனே போற்றி
- ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
- ஓம் நல்மயில் வாகனனே போற்றி
- ஓம் தேரில் வருபவனே போற்றி
- ஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றி
- ஓம் சந்திரனே போற்றி
- ஓம் சமுத்திர நாயகனே போற்றி
- ஓம் இனிமையே போற்றி
- ஓம் வெண்மையே போற்றி
- ஓம் குளுமையே போற்றி
- ஓம் கடலில் உதிப்பவனே போற்றி
- ஓம் நரிவாகனனே போற்றி
- ஓம் நட்சத்திர வாகனனே போற்றி
- ஓம் தென்கீழ் திசையோனே போற்றி
- ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
- ஓம் பெண்ணுரு ஆனவனே போற்றி
- ஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றி
- ஓம் அங்காரகனே போற்றி
- ஓம் அரத்த மேனியனே போற்றி
- ஓம் தென்திசையிருப்போனே போற்றி
- ஓம் துவரைப்பிரியனே போற்றி
- ஓம் க்ஷத்திரியனே போற்றி
- ஓம் தைரியமளிப்பவனே போற்றி
- ஓம் குஜனே போற்றி
- ஓம் குறைதீர்ப்பவனே போற்றி
- ஓம் அன்ன வாகனனே போற்றி
- ஓம் அல்லல் அறுப்போனே போற்றி
- ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
- ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
- ஓம் புதனே போற்றி
- ஓம் புத்தியளிப்பவனே போற்றி
- ஓம் பச்சை நிறத்தானே போற்றி
- ஓம் பற்றறுப்பவனே போற்றி
- ஓம் பயற்றில் அரியவனே போற்றி
- ஓம் பொன்னினும் அரியவனே போற்றி
- ஓம் குதிரையில் வருபவனே போற்றி
- ஓம் வடகீழ்த்திசையோனே போற்றி
- ஓம் சுகமளிப்பவனே போற்றி
- ஓம் சுபகிரஹமே போற்றி
- ஓம் வியாழக்கிரஹமே போற்றி
- ஓம் வடபுறத்திருப்போனே போற்றி
- ஓம் பிருஹஸ்பதியே போற்றி
- ஓம் குருபரனே போற்றி
- ஓம் சத்தியவடிவே போற்றி
- ஓம் பிரம்மகுலத்தோனே போற்றி
- ஓம் மஞ்சள் நிறத்தானே போற்றி
- ஓம் மெய்யுணர்த்துபவனே போற்றி
- ஓம் கலைநாயகனே போற்றி
- ஓம் கடலை ஏற்பவனே போற்றி
- ஓம் வேழவாகனனே போற்றி
- ஓம் வானோர்மந்திரியே போற்றி
- ஓம் சுக்கிரனே போற்றி
- ஓம் சுபகிரஹமே போற்றி
- ஓம் கிழக்கேயிருப்பவனே போற்றி
- ஓம் கருடவாகனனே போற்றி
- ஓம் பொன்பொருளளிப்பவனே போற்றி
- ஓம் போற்றப்படுபவனே போற்றி
- ஓம் மழைபொழிபவனே போற்றி
- ஓம் மொச்சை ஏற்பவனே போற்றி
- ஓம் வெண்ணிறமேனியனே போற்றி
- ஓம் இறவாமையளிப்பவனே போற்றி
- ஓம் சனிபகவானே போற்றி
- ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் நீலவர்ணனே போற்றி
- ஓம் நள்ளாற்று நாயகனே போற்றி
- ஓம் அருள் நாயகனே போற்றி
- ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
- ஓம் கருமை விரும்பியே போற்றி
- ஓம் காகம் ஏறியவனே போற்றி
- ஓம் மேற்புறத்திருப்பவனே போற்றி
- ஓம் மந்தகதியானே போற்றி
- ஓம் எள்பிரியனே போற்றி
- ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
- ஓம் தன்னிகரற்றவனே போற்றி
- ஓம் தளைகளுடைப்பவனே போற்றி
- ஓம் ராகுவே போற்றி
- ஓம் ரட்சிப்பவனே போற்றி
- ஓம் சிரமிழந்தவனே போற்றி
- ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
- ஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றி
- ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
- ஓம் பாதி உடலோனே போற்றி
- ஓம் உளுந்து விரும்புபவனே போற்றி
- ஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றி
- ஓம் ஆடேறிவருபவனே போற்றி
- ஓம் கேதுவே போற்றி
- ஓம் கேடறச்செய்பவனே போற்றி
- ஓம் செம்மேனியனே போற்றி
- ஓம் சிம்மவாஹனனே போற்றி
- ஓம் திங்களின் பகையே போற்றி
- ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி
- ஓம் சுக்ரமித்ரனே போற்றி
- ஓம் சூல் காப்பவனே போற்றி
- ஓம் அலி உருவானவனே போற்றி
- ஓம் அரவத்தலையோனே போற்றி
- ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
- ஓம் கொள்விரும்பியே போற்றி
- ஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றி
- ஓம் சூரியனாதி தேவர்கள் போற்றி
Friday, 23 February 2018
நவக்கிரகங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment